Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

தர்மபுரி, ஆக.10: தர்மபுரி மாவட்டத்தில், மஞ்சள் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய விவசாய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, சோலைகொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை, தூதைரையன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில், மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, தர்மபுரி ஒன்றியத்தில் பரவலாக பெய்துள்ளது. தற்போது பல ஒன்றியங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையொட்டி, நடப்பாண்டில் மஞ்சள் பயிரிட்டுள்ளோம். இதேபோல் வடகிழக்கு பருவமழையும் எங்களுக்கு கைகொடுத்தால் நடப்பாண்டில் மஞ்சள் விளைச்சல் அதிகரிக்கும்,’ என்றனர்.