Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 12 பேர் பலி

தர்மபுரி, ஆக.10: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி, கடந்த 7 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளை தடுக்க, காவிரி ஆற்றின் அபாயகரமான பகுதிகளில், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு கோடை காலம் முடிந்தும், கோடையை போல் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்காதது போன்றவற்றால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 கனஅடியாக சரிந்தது.

தற்போது கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து உள்ளது. கடந்த 5ம் தேதி 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று காலை விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆலம்பாடி பரிசல் துறை, ஊட்டலை பரிசல் துறை, முதலைப்பண்ணை, நாகர்கோயில், கோத்திக்கல் பரிசல்துறை, மாமரத்துகடவு உள்ளிட்ட முக்கிய இடங்களில் குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.