Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

காரிமங்கலம், ஜூலை 10:காரிமங்கலம் தாலுகாவில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கான பயிற்சி வகுப்புகள் நடந்தது. டிஆர்ஓ கவிதா தலைமை வகித்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். புள்ளியியல் துறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சியாளர்கள் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கம் மற்றும் முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அளித்தனர். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நேரடி பயிற்சியும், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், தாசில்தார் சிவக்குமார், டிஎஸ்ஓ செந்தில்குமார், எச்எஸ் துணை தாசில்தார் சுகுமார், விஏஓ.,க்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.