Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

தர்மபுரி, ஜூலை 9: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கு ஒதுக்கீடு செய்த உரங்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உர விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளில் யூரியா 3,277 மெட்ரிக் டன், டிஏபி 1,028 மெட்ரிக் டன், பொட்டாஷ் 712 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 5,909 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 336 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.