Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தர்மபுரி ஜி.ஹெச்.,ல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் மனு

தர்மபுரி, ஜூன் 9: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணனிடம், தர்மபுரி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் விமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு தர்மபுரி மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினசரி வந்து சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சரியாக வருவதில்லை. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கலெக்டர் இதனை ஆய்வு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.