Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மனைவி பிரிந்து சென்றதால் மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி, ஜூன் 9: தொப்பூர் ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (40), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மாதம்மாள். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பெரியண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் மாதம்மாள் கணவனிடம் கோபித்து கொண்டு, தனது பிள்ளைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பெரியண்ணன் மனைவி மாதம்மாள் சந்தித்துள்ளனர். ஆனால், மனைவி அவரிடம் சரியாக பேசவில்லை. இதனால் மனமுடைந்து வீட்டுக்கு சென்ற பெரியண்ணன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.