Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மினிசரக்கு வேன் மோதி டிரைவர் பலி

தர்மபுரி, ஜூன் 9: காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (37). டூரிஸ்ட் வேன் டிரைவர். நேற்று முன்தினம், திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலைக்கு வேனில் புறப்பட்டுள்ளார். சேலம்-அரூர் ரோட்டில் கோபிநாதம்பட்டி புலியூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தை நிறுத்திய நந்தகோபால், சிறுநீர் கழிப்பதற்காக ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகோபால் இறந்தார். இதுபற்றி கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.