Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

தர்மபுரி, மே 9: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(34). இவருக்கு திருமணமாகவில்லை. இதனால், மனவேதனையில் இருந்து வந்தார். மேலும், அதிகளவில் மது அருந்தி வந்துள்ளார். கடந்த 2ம் தேதி, வீட்டில் விஷத்தை குடித்து பெருமாள் மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.