Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ரோபோ மூலம் மரக்கன்று வழங்கி பாராட்டு

தர்மபுரி, ஜூலை 8: தர்மபுரியில் நேற்று ஹெல்மெட் அணிந்து சென்ற டூவீலர் ஓட்டிகளுக்கு ரோபோ மூலம் மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து போலீசார் பாராட்டு தெரிவித்தனர். தர்மபுரி நகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் பயன் பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில் தன்னார்வலர்கள் சார்பில், தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பில் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டிச் சென்றவர்களுக்கு ரோபோ மூலம் மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினர்.

மேலும் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஒட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் டவுன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தர்மபுரி ரோட்டரி சங்க துணை கவர்னர் வெங்கட், தலைவர் வேடியப்பன், செயலாளர் ரமேஷ்குமார், ரகுநாதன், வையாபுரி, பிரதீப்குமார், விஜயகுமார், பாண்டியன், திருமால், விக்டர், சுகுமார், வழக்கறிஞர் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து

கொண்டனர்.