பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 6: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் அசோகன், தர்மபுரி மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் வெற்றிவேல், ராஜேந்திரன், பாமக மாவட்ட செயலாளர் அரசாங்கம், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், முருகன், நகர செயலாளர் தென்னரசு, ரவீந்திரன், கவுன்சிலர் சபியுல்லா, கிருபாநிதி, முருகன், அரி, அர்ச்சுனன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
+
Advertisement
