Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இடி, மின்னலுடன் கொட்டிய கனமழை

தர்மபுரி, நவ.5: தர்மபுரி மாவட்டத்தில், இடி மின்னலுடன் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. தர்மபுரி மாவட்டத்தில், நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், அதகப்பாடி, இண்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. இலக்கியம்பட்டி சாலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவிகள் மழைக்கு குடை பிடித்தபடி சென்றனர். பாலக்கோட்டில் சுமார் அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது. பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நிலக்கடலை செடிகளை பயிரிடப்பட்டுள்ள நிலங்கள் ஈரப்பதம் அதிகரித்திருப்பதால், அறுவடை செய்வதற்கு எளிதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், நேற்று மாலை 4 மணியளவில் அரைமணி நேரம் கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. செட்டிகரை ஊராட்சிக்கு உட்பட்ட மை பாரத் அலுவலகத்தின் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் உடனடியாக செம்மண் கொட்டி, நிலத்தை மேம்படுத்தி மழைநீர் தேங்காத வகையில், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.