Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் ‌

தர்மபுரி, நவ.5: தர்மபுரியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் ஆள் எடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தலைவர் சுருளிநாதன், செயலாளர் தெய்வானை, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் தங்கராஜ், நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் பிரபு, பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் யாரப்பாஷா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகி பிரின்ஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி காவேரி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், மற்றும் ஊழியர்கள் மீது வழங்கப்பட்டுள்ள 17(3) குற்றக்குறிப்பாணைகளை ரத்து செய்ய வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.