தர்மபுரி, ஆக.5: தர்மபுரி சந்தையில், கொடைக்கானல் பேரிக்காய் கிலோ ரூ.200க்கு விற்பனையானது.ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் பேரிக்காய் மலை சார்ந்த இடங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கோடை வாஸ்தலமாக ஏற்காடு, ஊட்டி மற்றும் கொடைக்கானல், கால்லிமலை உள்ளிட்ட வன பகுதிகள் திகழ்ந்து வருகிறது. தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு காய்கறிகள் மலைப்பயிர்கள் மற்றும் பழங்கள் விளைகிறது. ஏற்காட்டை பொருத்த வரை காபி அதிகம் பயிரிடப்படுகிறது. அதேபோல், கொல்லிமலையில் அன்னாசி பழங்கள் மற்றும் மலை வாழை என அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இயற்கை வளம் மிகுந்து காணப்படுவதால் பழங்கள் மற்றும் கேரட் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பேரிக்காய் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது.
விவசாயிகள் அறுவடைக்கு பின்பு மாவட்டங்கள்தோறும் பேரிக்காய்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில் சேலம், தர்மபுரிக்கு அதிகளவில் பேரிக்காய் விற்பனைக்கு வந்துள்ளது. தர்மபுரி காய்கறி சந்தையில் குவித்து வைத்து விவசாயிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக பேரிக்காய் விட்டமின் சி சத்து கொண்டது. இதில் நீர்ச்சத்தும், நார்சத்தும் அதிகம் உள்ளது. இந்த பேரிக்காய் குளிர் பகுதிகளான கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் விளைகிறது. தற்போது சீசன் என்பதால் கொடைக்கானல் பகுதியில் இருந்து பேரிக்காய் தர்மபுரி காய்கறி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று தர்மபுரி சந்தையில் ஒரு கிலோ கொடைக்கானல் பேரிக்காய் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்


