Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தர்மபுரிக்கு வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு கிலோ ரூ.15க்கு விற்பனை

தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்ட உழவர் சந்தையில், தக்காளி விலை சரிந்துள்ளது. கிலோ ரூ.15க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி, கத்திரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த காய்கறிகளை, விவசாயிகள் நேரடியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, ஒட்டப்பட்டி அரூர், பாலக்கோடு உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தைக்கு தினமும் 2 டன் வரை தக்காளி வரத்து உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. தக்காளி விளைச்சல் அதிகரித்ததையடுத்து வரத்தும் அதிகரித்து தக்காளி விலை சரிந்தது.

நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதமாக தர்மபுரி மாவட்டத்தில், மழைபொய்த்த நிலையில், நீரின்றி பல ஏரிகள் வறண்டு வருகிறது. இதனால், விவசாயிகள் உழவு பணிகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மற்ற பயிர்களை விட தக்காளி விளைச்சல் தான் மிக அதிகமாக இருந்து வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்தும், தக்காளி வரத்து இருந்து வருகிறது. இதனால் தான் தக்காளி விலை சரிந்து வருகிறது. மேலும் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, அரூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்து வருகிறது. இதனால், தக்காளி விலை கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது, கிலோ ரூ.15க்கு விற்பதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது

என்றனர்.