அரூர், நவ.4: தர்மபுரி மாவட்டம் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர் தலைமையிலான குழுவினர் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 718 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஆம்னி பஸ் மற்றும் சரக்கு வாகனங்களில் உரிய அனுமதியின்றி கூடுதலாக ஆட்களை ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வந்தது,
அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட 167 வாகனங்களுக்கு வரியாக ரூ.6,37,000, அபராதமாக ரூ.3,41,000 என மொத்தம் ரூ.9,78,000 விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினார். முறையான ஆவணம் இல்லாத 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கூறுகையில், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது; கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்; வாகனம் முன், பின்புறத்தில் பம்பர் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்றார்.


