Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, நவ.4: தர்மபுரியில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய, சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் காந்திமதி, மாவட்ட துணை செயலாளர் கவுரி ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் ருக்மணி, மாவட்ட செயலாளர் ரிபேக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், துணை சுகாதார நிலையத்திலிருந்து இடைநிலை சுகாதார பணியாளரை அப்புறப்படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் செய்யும் தாய் சேய் நலப்பணியை இடைநிலை சுகாதார பணியாளர் செய்வதாக, உண்மைக்கு புறம்பாக அறிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும். செய்யாத வேலைகளுக்காக சமூக ஊடங்கள், தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கும் இடைநிலை பணியாளரை நீக்கம் செய்ய வேண்டும். பாலின பாகுபாடற்ற பதவி உயர்வு வழங்க வேண்டும். சமுதாய சுகாதார செவிலியருக்கு தாய் சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.