Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அதியமான்கோட்டை காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தர்மபுரி, நவ. 3: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதிகாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 10 மணி முதல் முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, காலபைரவரை தரிசித்தனர். தொடர்ந்து, காலபைரவர் ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் தமிழக, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் பூசணி மற்றும் எலுமிச்சை பழங்களில் விளக்கேற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் குழுவினர்

செய்திருந்தனர்.

அரூர்: அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோயிலில், காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், கோட்டை காளியம்மன் கோயிலிலும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தது.