Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வெண்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தர்மபுரி, ஆக.1: பட்டு வளர்ச்சி துறை சார்பில், தர்மபுரி 4 ரோடு பகுதியில் பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு மாவட்டம் சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், பட்டுக் கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

தர்மபுரி ஏல அங்காடியில், பட்டுக் கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், பட்டுக்கூடு வரத்து சரிந்து நேற்று தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 21 விவசாயிகள் 707 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.

இந்த பட்டுக்கூடுகள் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 212க்கு ஏலம் போனது. வழக்கத்தை விட பட்டுக்கூடுகள் நேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.884க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.