காரிமங்கலம், ஜூலை 1: காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதிய நிர்ணய ஆணை வழங்கும் நிகழ்ச்சி காரிமங்கலத்தில் நடந்தது. சிறப்பு நிலை பெற்ற 44 ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதிய நிர்ணய ஆணையை அரூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) விஜயகுமார் வழங்கி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் கற்றல் கற்பித்தல் பணியை மேம்படுத்துதல் குறித்தும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன் ரேணுகா, ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


