Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தொழிலாளி தவறி விழுந்து சாவு

புதுச்சேரி, ஜூலை 29: புதுச்சேரி நெட்டப்பாக்கம் கொம்யூன் செம்பியம்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் ராஜீ (56). இவரது மனைவி ஏழையம்மாள் (54). திருமணமாகி 30 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். ராஜீக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கதிர்காமம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கால் வலி காரணமாக கடந்த 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வலி அதிகமாக இருந்ததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜீ, அதே ஊரில் உள்ள லேத் கம்பெனி எதிரே வேப்ப மரத்தின் கீழே சிமென்ட் கட்டை பள்ளத்தில் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து மனைவி ஏழையம்மாள் அளித்த புகாரின்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ராஜீ நோய்க்கொடுமையால் வேப்ப மரத்தில் துணியால் தூக்குபோடும் போது கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது.