Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடலூரில் பூட்டி இருந்த வீட்டில் 6 கிராம் தங்க நகை திருட்டு

கடலூர், செப். 26: கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமசாமி (47). இவர் தற்போது விழுப்புரத்தில் தங்கி இருப்பதால் அடிக்கடி விவசாய நிலத்தில் பார்ப்பதற்கு கடலூர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்றுவிட்டார்.

பின்னர் கடலூர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மொட்டை மாடியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பெட்டியில் இருந்த தங்க மோதிரம், தங்க நாணயம், மூக்குத்தி உள்பட 6 கிராம் நகை மற்றும் ரூ.10000 பணம், பித்தளை பாத்திரங்களையும் மர்ம நபர் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறிதூது கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.