Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரி முருங்கபாக்கம் அரவிந்த் நகரை சேர்ந்தவர் கனகராஜூ(62), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் கனகராஜூ விபத்தில் சிக்கினார். அதன்பிறகு அவரால் முன்புபோல தொழிலில் ஈடுபட முடியவில்லை. இதனால் அவர் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

மேலும் 2 முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை குடும்பத்தினர் காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் கனகராஜூ தூங்க சென்றார். பின்னர், வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், முதல் மாடி அறைக்கு சென்று பார்த்து போது, அவர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.