Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பிரதோஷத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோயில் நந்தி பகவானுக்கு சந்தன அபிஷேகம்

கடலூர், செப். 25: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நேற்று பிரதோஷத்தையொட்டி மூலவர் சன்னதி எதிரே அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. பெண்கள், தாய்மார்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் கோயில் நிர்வாகிகள் மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் தங்களது தங்க நகைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.