நெல்லிக்குப்பம் அருகே விஷம் குடித்து மூதாட்டி சாவு
நெல்லிக்குப்பம், அக். 23: நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளக்கரை அரசடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி அஞ்சலை(68). இவர் தனது மருமகன் வீரமுத்து வீட்டில் தங்கி வசித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அஞ்சலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் நிலக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.