Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடனில் உள்ள வீட்டை ரூ.37 லட்சத்துக்கு விற்று மோசடி

புதுச்சேரி, செப். 23: கடனில் உள்ள வீட்டை ரூ.37 லட்சத்துக்கு விற்று மோசடி செய்தது தொடர்பாக கனடாவை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்காலை சேர்ந்தவர் கணேசன் மனைவி தீபா(38). இவரது வீடு காரைக்கால் கோவில்பத்தில் உள்ளது. இந்த வீடு ஏற்கனவே கடனில் இருந்துள்ளது. ஆனால் இந்த வீட்டை பொய்யான தகவல்களை கூறி, கனடா நாட்டை சேர்ந்த சுரேகா உள்ளிட்ட 5 பேர் கும்பல் விற்று ரூ.37.44 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தீபா, காரைக்கால் டவுன் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், கனடாவை சேர்ந்த சுரேகா, சென்னை அம்பத்தூர் மனோஜ்குமார் மனைவி ஜோதி, மகன் சுரேந்திரன், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணன், காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி அபிராமி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.