Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வடலூர் அருகே மது விற்ற முதியவர் கைது

வடலூர், செப். 23: வடலூர் அருகே உள்ள அரங்கமங்கலம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக வடலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த பாஸ்கர்(62) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் அரசு மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டபோது அவரை பிடித்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 21 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.