தஞ்சாவூர் அக்.22: தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் பிரச்னையை சாதகமாக முடித்து தருவதாக கூறி ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் (50), தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசில் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் சுகுமாறனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
+
Advertisement


