Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருக்கோவிலூர் சமூகநீதி விடுதி ஆய்வில் பொய் சொன்ன ஊழியருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

திருக்கோவிலூர், அக். 22: திருக்கோவிலூர் பகுதியில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திருக்கோவிலூர் செவலை ரோடு பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வரும் சமூகநீதி மாணவர் விடுதியில் பதிவேடு மிஷின் வேலை செய்யாத காரணத்தாலும் அங்கு பணியில் இருந்த சமையலர் குமாரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதோடு பல்வேறு கேள்விகளுக்கு மழுப்பி பதிலளித்தார்.

இதில் டென்ஷன் ஆன மாவட்ட ஆட்சியர் கடுப்பான ஆட்சியர் சமையல் அறைக்கு சென்று இன்று என்ன சமைத்தீர்கள் என்று கேட்டபோது சிக்கன் குழம்பு வைத்ததாகவும் கூறியுள்ளார். சமையலறையை கூர்ந்து கவனித்த மாவட்ட ஆட்சியர், சமையல் செய்யும் அடுப்பில் சமைத்ததற்கான எந்த வித சுவடும் இல்லாத காரணத்தால் எப்படி சமைத்தீர்கள் என்று துருவி துருவி கேட்டதில் அவர் இங்குதான் சமைத்தேன் என்று பொய் சொன்னதால் கடுப்பான மாவட்ட ஆட்சியர் அவர் மீது விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.