கடலூர், ஆக. 20: கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா அருகே கடலோரப் பகுதியை நோக்கி நகர கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் துறைமுக வளாகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement


