தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைனில் பகுதிநேர வேலை, உடைகள் விற்பனை எனக்கூறி 3 பெண் உள்பட 7 பேரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி

Advertisement

புதுச்சேரி, அக். 18: புதுச்சேரியில் ஆன்லைனில் பகுதிநேர வேலை மற்றும் ஆடைகள் விற்பனை எனக்கூறி 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த ஒருவரை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலமாக மர்ம நபர் தொடர்பு கொண்டு, பகுதிநேர வேலையில் டாஸ்குகளை முடிப்பதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் ரூ.1.34 லட்சம் அனுப்பியுள்ளார். அதற்கான லாபம் கிடைக்கவில்லை, செலுத்திய தொகையையும் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர் ஏமாற்றியுள்ளர்.

அதேபோன்று, நல்லவாடு பகுதியை சேர்ந்த ஆண் நபர், பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.65 ஆயிரத்துக்கு ஸ்நூக்கர் டேபிள் ஆர்டர் செய்து பணத்தையும், உப்பளத்தை சேர்ந்த பெண், ரூ.1199க்கு டிரஸ் ஆர்டர் செய்தும் ஏமாந்துள்ளனர். லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.6 ஆயிரத்திற்கு கேமரா விற்பதாக கூறி ரூ.6 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பெண், ரூ.1,300க்கு டிரஸ் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். முத்தியால்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.2,900க்கு ப்ரீ பயர் கேம் இலவசமாக தருவதாகக்கூறி ரூ.2,900ஐ மர்ம நபர் அபேஸ் செய்துள்ளார். மேற்கண்ட பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 7 பேர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News