Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பண்ருட்டி அருகே தீப்பிடித்து கூரை வீடு நாசம்

பண்ருட்டி, மே 18: பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை ராசாபாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன்(60). நேற்று மாலை இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமள என எரிந்து வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இதில் மொபட் மற்றும் ஆவணங்கள், மின்சாதன பொருட்கள், தானியங்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.