நெல்லிக்குப்பம், நவ. 15: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார், நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன் கோயில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை விசாரணைக்காக அழைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த பொட்டலத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.
போலீசார் துரத்தி சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் ரோடு பாடலி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குபேர கிருஷ்ணன்(23) என தெரிய வந்தது. போலீசார் அவரது பாக்கெட்டில் சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
