பண்ருட்டி, ஆக. 14: பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் மெயின் ரோட்டில் சண்முகவேல் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் பொன்னிக்கண்ணு (75) கடையில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (33) மற்றும் இமயவர்மன் (25) ஆகியோர் மிக்சர், காரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
பொன்னிக்கண்ணு கேட்டபோது, திட்டியதோடு மூதாட்டியை கீழே தள்ளி முகத்தில் உதைத்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு அங்கு வந்த சண்முகவேலை தாக்கியதோடு, கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் இமயவர்மனை கைது செய்தனர்.



