Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கற்பூரம் தயாரிக்கும் கம்பெனியில் ரூ.78 லட்சம் கையாடல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

கடலூர், ஆக. 13: கற்பூரம் தயாரிக்கும் கம்பெனியில் ரூ.78 லட்சம் கையாடல் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவபெருமாள் என்பவர், கடலூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லாவிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே அம்மாபேட்டை பகுதியில் கற்பூரம் உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறேன்.

எனது நிறுவனத்தில் பண்ருட்டி நத்தம் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ்(27), இவரது தந்தை வேலாயுதம்(55), அவரது தாய் குப்பு (எ) குப்பம்மாள் மற்றும் அவரது சகோதரிகள் தமிழ்ச்செல்வி(30), தமிழரசி ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை கவனித்து வந்த ஹரிதாஸ் நிறுவனத்திற்கு வரவேண்டிய பணத்தை முறையாக கணக்கில் செலுத்தாமல்,

அவரது குடும்பத்தாரின் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்து ரூ.78,14,870 கையாடல் செய்துள்ளதாக புகார் மனுவில் தெரிவித்தார். இதுகுறித்து எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஹரிதாஸ், வேலாயுதம், தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.