வானூர், ஆக.13: வானூர் தாலுகா காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (25), இவர் தவெக நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்திவேலின் நண்பர் முகில் என்பவரை முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவருடைய தந்தை ஊராட்சி தலைவர் வில்வமணி, மதிவாணன், பெருமாள், மதியழகன், சரண்ராஜ், சம்பத்குமார், சுகவானன் ஆகிய 8 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அப்போது அங்கு ஓடிவந்த சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் சண்டையை தடுத்துள்ளனர். அப்போது அவர்கள் மீதும் அந்த 8 பேரும் தாக்குதல் நடத்தியதில் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் வில்வமணி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.




