Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கண்டமங்கலம் அருகே பம்பை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கண்டமங்கலம், ஆக. 12: புதுச்சேரி, தமிழக பகுதியை இணைக்கும் முக்கிய ஆறாக சங்கராபரணி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் முக்கிய துணை ஆறாக பம்பை ஆறு அமைந்துள்ளது. இந்த பம்பை ஆறு விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில தொடங்கி சென்னகுணம், மல்லிகைப்பட்டு, திருவமாத்தூர், அய்யூர் அகரம், மேல்பாதி, செங்காடு, சன்னியாசிகுப்பம் வழியாக புதுவை மாநிலம், சோரப்பட்டு, வினாயகப்பட்டு, கலித்திரம்பட்டு, செல்லிபட்டு வழியாக கெண்டியங்குப்பத்தில் சங்கராபரணி ஆறு என்கிற செஞ்சி ஆற்றில் கலக்கிறது.

இந்த பம்பை ஆற்றின் மூலம் கலித்திரம்பட்டு, பெரியபாபு சமுத்திரம், சின்னபாபு சமுத்திரம், செல்லிபட்டு, கொத்தபுரிநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் நீர்பாசன வசதிகளை பெற்று வருகின்றனர். இந்த பம்பை ஆற்றில் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலித்திரம்பட்டு பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் திருட்டு அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

மேலும் சட்டவிரோதமாக மணலை திருடி அப்பகுதியில் உள்ள தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சிலர் சேமித்து, பிறகு அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கடத்துவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனை சில சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பம்பை ஆற்றில் மணல் திருட்டை முற்றிலுமாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.