புவனகிரி, ஆக. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், இந்த சிறுமி எதிர் வீட்டில் டிவி பார்க்க சென்றுள்ளார். அங்கு டி.வி பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வீட்டில் இருந்த 14 வயது சிறுவன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 14 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



