Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜ அமைச்சருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட தமிழக வாலிபர் கைது

புதுச்சேரி, ஏப். 12: வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில் அதிகளவில் கள்ள ஓட்டுகள் பதிவானது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்பில் வாக்காளர் படமும், இடம்பெறாது. இதனால் ஆள் மாறாட்டம் செய்த வாக்குகளை பதிவு செய்த தொடர்கதையாக இருந்தது. இதன்பிறகு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தேர்தல் கமிஷன் கையாள தொடங்கியது. உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடக்கிறது. இதனால் கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதிலும், புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்து வாக்கை பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக, காங்கிரஸ் எதிர், எதிராக மோதியது. இத்தொகுதிக்கான ஒரு வாக்குச்சாவடி மண்ணாடிப்பட்டு ஜவகர்லால் நேரு சமுதாய நலக்கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஒரு வாலிபர் வாக்கை பதிவு செய்தார். அங்கிருந்த தேர்தல் அதிகாரி, அந்த வாக்காளரின் பெயர் னிவாசன் என அறிவிக்க, பாஜ, காங்கிரஸ், பிறகட்சி பூத் ஏஜெண்டுகள் குறித்து கொண்டனர். இதில், காங்கிரஸ் ஏஜெண்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே அந்த நபர் வாக்கை பதிவு செய்துவிட்டார்.

அவர் வாக்கை பதிவு செய்துவிட்டு வந்தபோது காங்கிரஸ் ஏஜெண்டு தடுத்து நிறுத்தி அவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அவர் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும், மாநிலத்தை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் தொரவியை சேர்ந்த அரவிந்த் (31) என்பது தெரியவந்தது. இவரிடம் ஒரு அரசியல் கட்சியினர் அணுகி, நிவாசன் என்பவர் வாக்கு செலுத்த வரமாட்டார். அவர் வயதுடைய அரவிந்த் வாக்கு செலுத்தினால் பணம் தருவதாக கூறியுள்ளார். இதன்பேரில் அவர் ஆள் மாறாட்டம் செய்து வாக்கு செலுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அரவிந்தன் மீது வழக்குபதிந்து கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.