Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டையில் தவாக, பாமக உள்பட 4 பேர் மனுக்கள் வாபஸ் 14 பேர் போட்டி

உளுந்தூர்பேட்டை, ஏப். 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் வசந்தவேல், அதிமுக வேட்பாளர் குமரகுரு, தவெக வேட்பாளர் சுதாகர், நாதக வேட்பாளர் லோகேஸ்வரி, அபுமமுக வேட்பாளர் உதயகுமார் மற்றும் சுயேட்சைகள் உள்பட 18 பேர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் நேற்று வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் என்பதால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவாக வேட்பாளர் ராஜேஷ் தனது மனுவினை வாபஸ் பெற்றார். அவருடைய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான கேமரா சின்னம் கிடைக்காததால் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதேபோல் ராமதாஸ் அணியின் சார்பில் மனு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார் தனக்கு மாம்பழம் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டதால் தனது மனுவை வாபஸ் பெற்றார். மேலும் இரண்டு சுயேட்சைகள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றதால் தற்போது உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் சுயேட்சைகளுக்கான சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.