விழுப்புரம், ஆக. 26: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான்(26). இவர் கடந்த ஜூலை 26ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் ஷாஜகானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஷாஜகானின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மதிவாணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஷாஜகானை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



