Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தகராறில் 3 பேர் மீது தாக்குதல்

விக்கிரவாண்டி, ஆக. 26: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கலை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (21). நேற்று முன்தினம் இவர் தனது பைக்கில் சென்ற போது அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்பவர் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மகேஷ் தனது நண்பர்கள் ஜீவா, அய்யனார், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீநாத்தை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஸ்ரீநாத்தின் தந்தை அன்பழகன் (47), அண்ணன் ஸ்ரீகாந்த் (23) ஆகியோரையும் தாக்கினர். காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கெடார் போலீசார் தாக்குதல் நடத்திய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.