Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுச்சேரி மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது

மயிலம், ஆக. 28: புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை மயிலம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மயிலம் அடுத்துள்ள ஐவேலி பகுதியில் புதுச்சேரி மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் செல்லியம்பாக்கம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் திருநாவுக்கரசு (42),

புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டு நடுத்தெருவை சேர்ந்த திருமால் மகன் சுரேஷ் (47) ஆகிய இருவரும் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து கள்ளச் சந்தையில் அப்பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 249 மது பாட்டில்கள் மற்றும் 95 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.