Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரசு பணியை தவறாக பயன்படுத்தி சாப்ட்வேர் இன்ஜினியரின் ரூ.50 லட்சம் சொத்தை அபகரிக்க முயற்சி

விழுப்புரம், ஜூன். 16: விழுப்புரம் அருகே சாப்ட்வேர் இன்ஜினியரின் ரூ.50 லட்சம் சொத்தை அபகரிப்பதை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரத்தை சேர்ந்த தென்னரசு. சாப்ட்வேர்இன்ஜினியர். நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு சொந்தமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள பூர்வீக சொத்து விழுப்புரம் அருகே மழவராயனூர் கிராமத்தில் உள்ளது. குடும்பத்தின் பெயரில் யூடிஆர் காலத்திலிருந்து பட்டாவாக இருக்கிறது. பத்திரமும், பட்டாவும் எங்களிடம் உள்ள நிலையில் நில அளவைகோரி அதற்கான கட்டணத்தை செலுத்தி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். பலமாதங்களாகியும் என்மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நேரில் சென்று கேட்டால் ஏதாவது ஒரு காரணங்களை கூறி அலைகழிப்பு செய்தனர். பின்னர்தான் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் எந்தவித ஆவணங்களுமின்றி என்னுடைய ெசாத்திற்கு உரிமைகோரி வருகிறார். சார்பதிவாளர் அலுவலகம் வரை சென்று அவரை எந்த ஆவணங்களுமின்றி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அவருக்கு விழுப்புரம் தாசில்தார் நெருங்கிய நண்பர் என்பதால் ஒருதலைபட்சமாக என்னுடைய இடத்தை அளவீடு செய்யாமல் தடை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வேயரிடம் கேட்டதற்கு தாசில்தார் நில அளவை செய்வதை நிறுத்தும்படி கூறியதாக தெரிவிக்கிறார்.

ெசாத்துக்கான பத்திரம், பட்டா அனைத்தும் தெளிவாக என்னிடம் உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எனதுசொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு தாசில்தாரும் துணை போகிறார். எனவே எனது சொத்தை அபகரிப்பதை தடுத்து, நிலஅளவீடு செய்ய உத்தரவிட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.