Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மதியழகன்(25). அதே பகுதியை சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் வினோத்(28). இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில் சம்பவத்தன்ற இரவு மதியழகன் தனது பைக்கை வீட்டின் முன் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். அப்போது வினோத் வேறொரு சாவியை போட்டு பைக்கை எடுத்து வாசலில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு, ஏன் சாலையில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று உள்ளீர்கள் என ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மதியழகனை, வினோத் காலணியால் அடிக்க முயன்றுள்ளார். இதை தடுக்க முயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்ட முயன்றதை தடுத்தபோது இடுப்பில் வெட்டிவிட்டு, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிசென்றுள்ளார். இது குறித்து மதியழகன், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வினோத்தை கைது

செய்தனர்.