Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மதுபாரில் தகராறு:  வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

விருத்தாசலம், ஜூலை 31: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுப்பிரமணி(26). சம்பவத்தன்று இவர் படுகளாநத்தம் கிராமத்தை சேர்ந்த, தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை செய்து வரும் தங்கவேல் மகன் போத்துமணி(33) என்பவருடன் பரவலூர் டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த போத்துமணி, சுப்பிரமணியை தாக்கியுள்ளார். பின்னர், நண்பரான திருமால் மகன் திரிசங்கு (24) என்பவரை வரவழைத்து அவருடன் சேர்ந்து மேலும் சுப்ரமணியை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து போத்துமணி, திரிசங்கு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.