Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வீடு வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.65.50 லட்சம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி, அக். 30: புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வளர்மதி(55). இவர் கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வச்சலா என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது, தனக்குத் தெரிந்த வீடு ஒன்று விற்பனைக்கு இருப்பதாக வச்சலா, வளர்மதியிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வளர்மதி, அந்த வீட்டை வாங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.55 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பல்வேறு தவணைகளில் கூடுதலாக பணம் வழங்கி மொத்தம் ரூ.65.50 லட்சம் கொடுத்துள்ளார்.இதற்கிடையே, அந்த வீட்டை வளர்மதிக்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் செய்துகொண்ட வச்சலா, ஒப்பந்தத்தின்படி வீட்டை வளர்மதியின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த வளர்மதி விசாரித்தபோது, அந்த வீட்டை வச்சலா தனது உறவினர்களான எல்லைப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த ராஜகுமார் மற்றும் ராம்குமார் (எ) லிங்கேஸ்வரன் ஆகியோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை ஏமாற்றும் நோக்கில் வச்சலா, ராஜகுமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் இணைந்து செயல்பட்டதாக நேற்றுமுன்தினம் வளர்மதி அளித்த புகாரின்பேரில், 3 பேர் மீதும் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.