Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிள்ளை அருகே போக்சோ வழக்கில் மகன் கைது தந்தை தூக்கிட்டு தற்கொலை

புவனகிரி, செப். 30: போக்சோ வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதால், மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள நவாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மகன் சந்தோஷ்(23). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் 12ம் வகுப்பு மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தி காதலிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.

மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த அவரது தந்தை சக்திவேல் நேற்று நவாப்பேட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளை கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.