Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு; இறுதி ஊர்வலத்தில் இருதரப்பு மோதல்

வடலூர், செப். 30: குறிஞ்சிப்பாடி அருகே இறுதி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாமகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் நடந்தபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி, பின்னர் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் மோதலாக மாறியது.

இச்சம்பவம் குறித்து ஒரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் சுமித் குமார் (19), திவாகர் (19), சூர்யா (19) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், சுந்தர்ராஜ் (எ) சின்னையன் (23) என்பவரை நேற்று காலை கைது செய்தனர்.