Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; சஸ்பெண்ட் எஸ்பி மீது காரைக்கால் போலீசார் வழக்குபதிவு

காரைக்கால், செப். 30: காரைக்கால் எஸ்பியாக கடந்த 2024ல் சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றினார். அப்போது, மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலருக்கு எஸ்எம்எஸ் மற்றும் நள்ளிரவு நேரங்களில் வீடியோ கால் மூலம் பாலியல் ரீதியாக தொல்லை மற்றும் வற்புறுத்தல் அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எஸ்பி சுப்பிரமணியன், புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக பெண் காவலரின் தாயார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சீனியர் எஸ்பி நித்யா தலைமையிலான உள்புகார் குழு விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு கடந்த 24ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து கடுமையான கேள்விகளையும் நீதிமன்றம் முன்வைத்தது. இதைத்தொடர்ந்து தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவின்பேரில், எஸ்பி சுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.