Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு 3 பேரை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை

புதுச்சேரி, அக். 29: புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (43), தொழிலதிபர். இவரது நண்பர்கள் மூலமாக சென்னையை சேர்ந்த முகமது ரபீக் (42) என்பவர் அறிமுகமானார்.

இவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறினார். பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசைப்பட்டு வெங்கடேஷ் பணத்தை இழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சென்னையை சேர்ந்த முகமது ரபீக் உட்பட 8 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறிவுமணி, ஸ்டாலின் மற்றும் சிகாமணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து நேற்று சிறையில் அடைத்தனர்.